Monday, June 9, 2008

பழம் பாடல் புதுக்கவிதை

               தேர்ச்  சக்கரம்  தன்னை  நிமிர்த்த  வல்ல
                         திமிர்ந்திருக்கும்  தோள்  கொண்ட  பாண்டியனின்
               பேர்ச் சிறப்பை  சொல்லுகின்றார்  புலவர் அந்தப்
                         பெருமையினைப்  பார்த்தாலே பெருமை தோன்றும்
                ஊர் முழுக்க  தன் அழகுக் குடையின் கீழே
                          ஒன்றாக்கி  ஆளுகின்ற  பாண்டியனின்
                போர்த் திறத்தை  அறிந்துணர்ந்த  காரணத்தால்
                          பொன்னணிகள்   அணிந்துள்ள  வானோர்  இந்தப்


                 பூமியிலே  கால்  வைக்க  அஞ்சினராம்
                           புகழுகின்றார்  பாண்டியனைப்  புலவர்  நன்கு
                 ஆமிதனை நாம்  அறிவோம் இமையவர் கால்
                           அந்தரத்தில்  தான்  இருக்கும்  தரையைத்  தொடா
                 தாமிதனை  தெரிந்திட்ட  புலவர்  அதைத்
                            தன்  தலைவன்  பாண்டியனின்  புகழாய்ச் சேர்த்தார்
                 நாமிதனைக் கண்ணுற்றோம்  மகிழ்ச்சி  கொண்டோம்
                            நந்  தமிழர்  அனைவருக்கும்  தர  விழைந்தோம்


                                           முத்தொள்ளாயிரம்

                   நேமி  நிமிர் தோள்  நில்வு  தார்த்   தென்னவன்
                   காமர்  நெடுங்குடைக்  காவலன்   ஆணையால்
                   ஏம மணிப் பூண்  இமையார்  திருந்தடி
                   பூமி மிதியாப்  பொருள்                  

0 மறுமொழிகள்: