Sunday, June 8, 2008

ஞான வீரர்

                   உடம்பு  எனும் சட்டைக்குள்  உயிர்  கிடந்து
                                 ஒராயிரம்    துன்பம்  அடைகின்றது
                   விடுதலைக்காய் ஏங்குகின்ற  உயிரை  நானும்
                                 விட்டு விட விழைகின்றேன் அதனால்  இனி
                   உணவருந்தல்  நிறுத்திடுவேன்  தண்ணீர்  கூட
                                  உட் செல்ல அனுமதியேன் என்று சொல்லி
                    நிணம் தசை  நார்  கொண்டதம்மின்  உடலை விட்டு
                                   நிம்மதியாய்  உயிர்  பிரியச்  செய்த  வீரர்


                    கணப் பொழுதும்  ஏழைகளை மறந்து  விடாக்
                                   காந்தியத் தொண்டர்  இவர்  அடிகள் தம்மின்
                    உளத்தினிலே  குருவாக உயர்ந்து நின்ற
                                   உயர் குணத்துத்  துறவி இவர் வள்ளுவரின்
                    குறட் கருத்துக்குயிராகித்  துறந்த  வீரர்
                                   கொள்கை வழி சிறந்து  நின்ற  காந்தி சீடர்
                     அற வழியார் வினோபா  அவரே  இங்கு
                                    ஆண்மையுடன்  உயிர் துறந்த  ஞான வீரர்



                                     திருக்குறள்

                 மற்றும்  தொடர்ப்பாடு  எவன்  கொல்  உயிர்    அறுக்கல்
                 உற்றார்க்கு  உடம்பும்  மிகை
                                    

0 மறுமொழிகள்: