Sunday, June 8, 2008

அன்றே சொன்னார்

                மதங்கள் என்று  சொல்லி நிற்பார்  தமக்கு  ஒரு
                         மாபெரிய  கேள்வியினை  வைத்தார்  நல்ல
               விதம்  எதையும்  உணர்ந்துணர்ந்து  உண்மை சொல்லும்
                         விவேகானந்தத் துறவிகேட்பீர்  அய்யா
               விதவைகளின்  கண்ணீரைத் துடைக்க வொண்ணா
                         வெறும்  வயிற்று  ஏழைக்ளுக்கு  உணவளிக்கா
               மதங்களினை  மதங்கள்  என்று  கொள்ள மாட்டேன
                          மனிதர்களே  உணர்ந்திடுங்கள்  என்று சொன்னார்



               மனிதர்களுக்குதவத்தான்    மதங்கள்  வெறும்
                          மடமைகளும்  சடங்குகளும்  அல்ல  என்று
               கனி மொழியில்  சொல்லாமல்  கொஞ்சம்  கொஞ்சம்
                          கடின மொழி தனிலேதான்  சொல்லிச் சென்றார்
               தனி மனிதரல்ல  பெரும்  இயக்கமாகி
                          தாம்  நின்றார்  நமக்கெல்லாம்  தாயாய் நின்றார்
               இனி உணர்வோம்  மனிதர்களே  மனிதம்  பேணல்
                          எம்மதமும் கொண்டுள்ள சுருதி   நாதம்
                          

0 மறுமொழிகள்: