Saturday, June 7, 2008

பழம் பாடல் புதுக்கவிதை

பல யானை கொண்ட ஒரு படையைக் கொண்ட
பலம் எண்ணி சேரனையே பகைத்திடாதீர்
வளமான கோட்டையதின் உயரம் கொண்டு
வாலாட்டி நிற்காதீர் சேரனிடம்
களம் என்றும் சேரனது சொந்தம் உடன்
கப்பம் கட்டிக் காப்பாற்றிக் கொள்ளும் உம்மை
நிலம் அல்ல வானோர்கள் பாரும் அங்கே
நீள் வில்லைப் பூட்டி தம்மைக் காத்துக் கொண்டார்


உடன் உந்தம் மதிற் சுவரில் வில்லைப் பூட்டும்
ஒரு போதும் தீங்கின்றி நாடு வாழும்
திடம் ஒன்று சொல்கின்றேன் சரணடைந்தோர்
தெய்வம் அவன் நல் வாழ்வு வாழ்ந்திடலாம்
உளம் கொண்டார் வான வில்லைக் கவிஞர் அதில்
உதித்தன்றோ இவ்வழகுக் கவிதை
பழம் பெருமைத் தமிழ் இன்றும் வாழுதற்கு
பாடி நின்ற புலவரையே போற்றிடுவோம்

முத்தொள்ளாயிரம்

பல் யானை மன்னர் படுதிறை தந்துய்மின்
மல்லல் நெடு மதில் வாங்கு வில் பூட்டுமின்
வள்ளிதழ் வாடாத வானோரும் வானவன்
வில்லெழுதி வாழ்வார் விசும்பு

0 மறுமொழிகள்: